
Interesting Facts, Trivia, And Records About '6ft 8 inch Tall' Kyle Jamieson (Image Source: Google)
நியூசிலாந்து அணியில் 26 வயதான இளம் வேகப்புயல் கைல் ஜேமிசன். கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய அணிக்கெதிரான தொடரின் போது இவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானர்.
தான் அறிமுகமான முதல் தொடரிலேயே இந்திய அணி கேப்டன் விராட் கோலியின் விக்கெட்டை கைப்பற்றி, செய்திதாள்களின் தலைப்பு செய்தியாக உருவெடுத்தார்.
அன்றிலிருந்து இன்று வரை நீயூசிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக ஜெமிசன் உருவெடுத்துள்ளார். அதிலும் தற்போது நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி மீண்டும் தனது திறனை நிறுபித்துள்ளார்.