ban vs nz test
BAN vs NZ: புதிய கேப்டனுடன் களமிறங்கும் வங்கதேச அணி!
நியூசிலாந்து வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 28 ஆம் தேதி தொடங்குகிறது. வங்கதேச அணியை டெஸ்ட் போட்டிகளில் லிட்டன் தாஸ் வழிநடத்தி வந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணியின் புதிய கேப்டனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “லிட்டன் தாஸுக்கு குழந்தை பிறந்துள்ளதால், அவர் குடும்பத்துடன் நேரம் செலவிட அவருக்கு ஒரு மாதம் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனால் அவர் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற மாட்டார். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வங்கதேசத்தை நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ வழிநடத்துவார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Cricket News on ban vs nz test
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47