
IN-W vs SL-W, WCWC 2025: ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இன்று (செப்டம்பர் 30) முதல் இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாக தொடங்கிடது. இதன் முதல் லீக் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலன இந்திய அணியை எதிர்த்து, சமாரி அத்தபட்டு தலைமையிலான இலங்கை அணி பலப்பரீட்சை நடத்தின.
இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி கௌகாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நிலையில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா - பிரதிகா ரவால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மிருதி மந்தனா 8 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் பிரதிகாவுடன் இணைந்த ஹர்லீன் தியோ சிறப்பாக செயல்பட்டு ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் பிரதிகா ராவல் 37 ரன்களில் ஆட்டமிழக்க, ஹர்லீன் தியோல் 48 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். பின்னர் களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 21 ரன்னிலும், ரிச்சா கோஷ் 2 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தானர். பின்னர் இணைந்த தீப்தி சர்மா - அமஞ்சோத் கவுர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.