namibia cricket team
தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி நமீபியா அசத்தல் வெற்றி!
தென் ஆப்பிரிக்க அணி நமீபியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரே ஒரு டி20 போட்டியில் விளையாடியது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி இன்று நடைபெற்ற நிலையில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணிக்கு லுவான் ட்ரே பிரிட்டோரியஸ் மற்றும் குயிண்டன் டி காக் தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டி காக் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அடுத்து களமிறங்கிய ரீஸா ஹேன்றிக்ஸும் 7 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் மற்றொரு தொடக்க வீரரான லுவன் டிரே பிரிட்டோரியஸும் 22 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ருபின் ஹார்மன் - ஜேசன் ஸ்மித் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ருபின் ஹர்மான் 23 ரன்களுக்கும், ஜேசன் ஸ்மித் 31 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய கேப்டன் டோனவன் ஃபெரீரா 4 ரன்களிலும், சிமலெனா 11 ரன்னிலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பிஜோர்ன் 19 ரன்களையும், ஜெரால்ட் கோட்ஸி 12 ரன்களையும் சேர்த்தனர்.
Related Cricket News on namibia cricket team
- 
                                            
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் டேவிட் வைஸ்!சர்வதேச கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நமீபியா அணிகளுக்காக விளையாடிய டேவிட் வைஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். ... 
- 
                                            
நேபாள், நமீபியா அணிகளுடன் முத்தரப்பு தொடரில் விளையாடும் நெதர்லாந்து!நேபாள், நமீபியா அணிகளுக்கு எதிரான முத்தரப்பு தொடரில் விளையாடும் நெதர்லாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ... 
- 
                                            
டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது நமீபியா!வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு நமிபியா அணி தகுதிப்பெற்று அசத்தியுள்ளது. ... 
Cricket Special Today
- 
                    - 12 Jun 2025 01:27
 
- 
                    - 18 Mar 2024 07:47
 
 
             
                             
                             
                         
                         
                         
                        