Advertisement

டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது நமீபியா!

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு நமிபியா அணி தகுதிப்பெற்று அசத்தியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan November 28, 2023 • 20:12 PM
 டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது நமீபியா!
டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது நமீபியா! (Image Source: Google)
Advertisement

அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இதுவரை மொத்தம் 8 டி20 உலகக்கோப்பை தொடர்கள் நடைபெற்றுள்ளன. அந்த தொடர்களில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தலா 2 முறையும், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா அணிகள் தலா 1 முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன.

இந்நிலையில் 9ஆவது டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இதில் போட்டியை நடத்தும் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேரடியாகவும், 2022 டி20 உலகக்கோப்பையில் முதல் எட்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளும், ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் டி20 தரவரிசை அடிப்படையிலும் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.

Trending


மீதமுள்ள 8 அணிகள் தகுதி சுற்று அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அதனடிப்படையில் ஆப்பிரிக்கா பிராந்திய தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 5 ஆட்டங்களில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்ற நமீபியா அணி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளது.

தகுதி சுற்று அடிப்படையில் இதுவரை 7 அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவை அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன், நமீபியா ஆகிய நாடுகள் ஆகும். மீதமுள்ள 1 இடத்திற்கு ஜிம்பாப்வே, உகாண்டா, கென்யா அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இவை ஆப்பிரிக்கா பிராந்திய தகுதி சுற்று போட்டியில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement