-mdl.jpg)
இங்கிலாந்து மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையேயான ஐசிசி டி20 உலகக்கோப்பை லீக் போட்டியானது இன்று ஆண்டிகுவாவில் நடைபெற்றது. மழை காரணமாக டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 10 ஓவர்களாக குறைக்கப்பட்ட இப்போட்டியில் டாஸை வென்ற நமீபியா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடி 10 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்களைச் சேர்த்தது.
இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக ஹாரி புரூக் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 47 ரன்களையும், ஜானி பேர்ஸ்டோவ் 31 ரன்களையும் சேர்த்தனர். நமீபியா அணி தரப்பில் ரூபன் டிரெம்பெல்மேன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நமீபியா அணிக்கு மைக்கேல் வான் லிங்கேன் - நிக்கோலஸ் டேவின் இணை அதிரடியான தொடக்கத்தக் கொடுத்தனர்.
அதன்பின் நிக்கோலஸ் டேவின் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 18 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த லோகன் வான் லிங்கேன் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்களை விளாசி 33 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர வீரர் டேவிட் வைஸும் 2 பவுண்டரி, 2 சிக்ஸ்ர்கள் என 27 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, நமீபியா அணியின் தோல்வியும் உறுதியானது.