Advertisement
Advertisement

Adam rossington

PSL 2023: Quetta Gladiators need 165 runs to win against Karachi Kings!
Image Source: Google

PSL 2023: ரோஸிங்டன் அரைசதம்; கிளாடியேட்டர்ஸுக்கு 165 டார்கெட்!

By Bharathi Kannan March 06, 2023 • 21:34 PM View: 151

பாகிஸ்தனைன் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்றுவரும் 22ஆவது லீக் ஆட்டத்தில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - கராச்சி கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற குயிட்டா கிளாடியேட்டர்ஸ் முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய கராச்சி கிங்ஸ் அணியில் மேத்யூ வேட் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய டயூப் தாஹிர் 7 ரன்களிலும், காசிம் அக்ரம் 8 ரன்களிலும், ஷோயப் மாலில் 13 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

Related Cricket News on Adam rossington