As nadeem
Emerging Asia Cup 2024: இந்திய அணிக்கு 141 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஓமன்!!
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் நடத்தப்படும் வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை 2024 டி20 கிரிக்கெட் தொடர் ஓமனில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா ஏ அணியை எதிர்த்து ஓமன் அணி பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஓமன் அணிக்கு கேப்டன் ஜதிந்தர் சிங் - அமீர் கலீம் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் அமீர் கலீம் 2 சிக்ஸர்களுடன் 13 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கரண் சொனாவலே ஒரு ரன்னுடன் நடையைக் கட்டினார். பின்னர் ஜதிந்தர் சிங்குடன் இணைந்த வசிம் அலியும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் சீரான வேகத்தில் உயரத்தொடங்கியது.
Related Cricket News on As nadeem
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் ஷாபாஸ் நதீம்!
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஷாபாஸ் நதீம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: அயர்லாந்துக்கு அதிர்ச்சியளித்த ஓமன்!
அயர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஓமன் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பரபரப்பான ஆட்டத்தில் அமெரிக்காவை வீழ்த்தியது ஓமன்!
அமெரிக்க அணிக்கெதிரான 3ஆவது போட்டியில் ஓமன் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24