Advertisement
Advertisement

Australia tour new zealand 2024

NZ vs AUS, 1st T20I: பவுண்டரி மழை பொழிந்த ரச்சின், கான்வே; ஆஸிக்கு 216 ரன்கள் இலக்கு!
Image Source: Google

NZ vs AUS, 1st T20I: பவுண்டரி மழை பொழிந்த ரச்சின், கான்வே; ஆஸிக்கு 216 ரன்கள் இலக்கு!

By Bharathi Kannan February 21, 2024 • 13:17 PM View: 120

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரின் முதல் போட்டி இன்று வெலிங்டனில் தொடங்கியது. நியூசிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பந்துவீச அழைத்தது. 

இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஃபின் ஆலன் - டெவான் கான்வே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் தொடக்கத்திலேயே அதிரடி காட்டியதன் மூலம் முதல் 6 ஓவர்களிலேயே நியூசிலாந்து அணி 68 ரன்களை குவித்தது. இதற்கிடையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஃபின் ஆலன் 2 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 32 ரன்கள் சேர்த்த நிலையில் மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 

Related Cricket News on Australia tour new zealand 2024