நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா, முதல் டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை வெலிங்டனில் நடைபெறவுள்ளது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரின் முதல் போட்டி நாளை வெலிங்டனில் நடைபெறவுள்ளது. நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ளதால் இத்தொடருக்கு தயாராகும் வகையில் இரு அணிகளும் இத்தொடரை பயன்படுத்தவுள்ளன. அதேசமயம் இரு அணிகளிலும் அதிரடி வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
போட்டி தகவல்கள்
Trending
- மோதும் அணிகள் - நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா
- இடம் - ஸ்கை மைதானம், வெலிங்டன்
- நேரம் - பகல் 11.40 மணி (இந்திய நேரப்படி)
பிட்ச் ரிப்போர்ட்
வெலிங்டனில் உள்ள ஸ்கை மைதானத்தின் ஆடுகளம் பேட்டர் மற்றும் பந்துவீச்சுக்கு சமநிலையான ஆடுகளமாக பார்க்கப்படுகிறது. இந்த மைதானத்தில் புதிய பந்தில் வீசும் பந்துவீச்சாளர்களுக்கு நல்ல அளவு உதவி கிடைக்கும். இருப்பினும், ஆட்டம் செல்ல செல்ல அது பேட்டிங்கிற்கு சிறந்ததாக மாறும், மேலும் பேட்டர்கள் செட்டில் ஆனதுடன் தங்கள் ஷாட்களை விளையாடலாம். இதனால் இப்போட்டியில் டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றி வழிவகுக்கலாம்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 16
- நியூசிலாந்து - 06
- ஆஸ்திரேலியா - 10
நேரலை
நியூசிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான டி20 தொடரை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரலையில் கண்டுகளிக்கலாம்.
உத்தேச லெவன்
நியூசிலாந்து: டெவோன் கான்வே, ஃபின் ஆலன், ரச்சின் ரவீந்திரா, ஜோஷ் கிளார்க்சன், கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர் (கே), டிம் சௌதீ, இஷ் சோதி, லோக்கி ஃபெர்குசன், ஆடம் மில்னே.
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் (கே), கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ், ஆரோன் ஹார்டி, டிம் டேவிட், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹசில்வுட், ஆடம் ஸாம்பா.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர்: ஜோஷ் இங்கிலிஸ்
- பேட்டர்ஸ்: டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஃபின் ஆலன்(துணைக்கேப்டன்), கிளென் பிலிப்ஸ்
- ஆல்-ரவுண்டர்கள்: கிளென் மேக்ஸ்வெல்(கேப்டன்), ரச்சின் ரவீந்திரா
- பந்துவீச்சாளர்கள்: ஆடம் ஜம்பா, பாட் கம்மின்ஸ், லோக்கி ஃபெர்குசன், டிம் சௌதீ
Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.
Win Big, Make Your Cricket Tales Now