Bangladesh vs afghanistan 2 wicket win
ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது வங்கதேசம்!
வங்கதேச அணி தற்சமயம் ஆஃப்கானிஸ்தானுடன் ஐக்கிய அரபு ஆமீரகத்தில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. ஷார்ஜாவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு இப்ராஹிம் ஸத்ரான் - செதிகுல்லா அடல் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் சிறப்பாக தொடங்கிய செதிகுல்லா அடல் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 23 ரன்களில் ஆட்டமிழக்க, 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 38 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ரஹ்மனுல்லா குர்பாஸ் சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுபக்கம் களமிறங்கிய தாராகில் ஒரு ரன்னிலும், தார்விஷ் ரசூலி 14 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 30 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த அஸ்மதுல்லா ஒமர்ஸாய் - முகமது நபி இணை அணியை வலுவான நிலையை நோக்கி அழைத்துச் சென்றனர்.
Related Cricket News on Bangladesh vs afghanistan 2 wicket win
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47