Cricket match prediction
நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்யுமா இந்தியா?
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. ஹைதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் 12 ரன் வித்தியாசத்திலும், ராய்ப்பூரில் நடைபெற்ற 2ஆவது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்தியா,நியூசிலாந்து அணிகள் மோதும் 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று நடக்கிறது. இந்த ஆட்டத்திலும் நியூசிலாந்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற ஆர்வத்துடன் இந்திய அணி இருக்கிறது.