
Sri Lanka vs Bangladesh 2nd T20I Dream11 Prediction: இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை தம்புளாவில் உள்ள ரங்கிரி தம்புளா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இலங்கை அணி ஏற்கெனவே முதல் டி20 போட்டியில் வெற்றிபெற்ற உத்வேகத்துடன், வங்கதேச அணி இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடனும் விளையாடவுள்ளனர். மேலும் இரு அணிகளிலும் அதிரடி பேட்டர்களும், அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களும் இடம்பிடித்துள்ளனர். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
SL vs BAN 2nd T20I Match Details
- மோதும் அணிகள் - இலங்கை vs வங்கதேசம்
- இடம் - ரங்கிரி தம்புளா சர்வதேச கிரிக்கெட் மைதானம், தம்புளா
- நேரம்- ஜூன் 10, இரவு 7 மணி (இந்திய நேரப்படி)