Cricket stadium
அருண் ஜெட்லி மைதானத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்!
பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ஆயுதப் படைகள் மேற்கொண்டுள்ள 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு பழிவாங்கும் விதமாக டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தை வெடிக்கச் செய்வதாகக் கூறி டெல்லி கிரிக்கெட் சங்கத்திற்கு (டிடிசிஏ) இன்று மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை அருண் ஜெட்லி மைதானத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகவும், அது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் டிடிசிஏ உயர் அதிகாரி ஒருவர் ஐஏஎன்எஸ்-இடம் தெரிவித்தார். அந்த மின்னஞ்சலில், "உங்கள் மைதானத்தில் ஒரு குண்டு வெடிக்கும். இந்தியாவில் பாகிஸ்தானின் உறுதியான ஸ்லீப்பர் செல் செயல்பட்டு வருகிறது. இந்த வெடிப்பு, ஆபரேஷன் சிந்தூருக்கு நாங்கள் பழிவாங்கும் செயலாக இருக்கும்" என்று இருந்ததாக கூறப்படுகிறது.
Related Cricket News on Cricket stadium
-
ராயல்ஸ் அணியின் திட்டங்களுக்கு கௌகாத்தி விக்கெட் பொருந்தவில்லை - ஆகாஷ் சோப்ரா!
ராஜஸ்தான் ராயல்ஸின் சொந்த மாநில போட்டிகள் அவர்களின் சொந்த மாநிலத்தில் நடைபெறவில்லை என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ...
-
PAK vs BAN, 2nd Test: தொடர் மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்ட முதல் நாள் ஆட்டம்!
தொடர் மழை காரணமாக பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் டாஸ் வீசப்படாமலேயே முழுவதுமாக கைவிடப்பட்டது. ...
-
PAK vs BAN: இரண்டாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டிக்கு மாற்றம் - பிசிபி அறிவிப்பு!
பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ராவல்பிண்டிக்கு மாற்றியமைப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்; அடிக்கல் நாட்டும் பிரதமர்!
வாரணாசியில் வரும் 23 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். ...
-
இந்தூர் மைதானத்திற்கு மோசமான பிட்ச் என்ற ரேட்டிங்கை கொடுத்தது ஐசிசி!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற இந்தூரிலுள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்திற்கு மோசமான பிட்ச் என்ற ரேட்டிங்கை ஐசிசி கொடுத்து, 3 கருப்பு புள்ளிகளையும் வழங்கியுள்ளது. ...
-
எந்த களத்தில் விளையாடுகிறோம் என்பது முக்கியமல்ல - சூர்யகுமார் யாதவ்!
நியூசிலாந்துடனான டி20 போட்டிகளில் ஏற்படுத்தப்பட்ட பிட்ச்-களின் நிலைமை அதிர்ச்சி அளித்ததாக ஹர்திக் பாண்டியா குற்றம் சாட்டிய சூழலில் சூர்யகுமார் யாதவ் மாற்று கருத்தை கூறியுள்ளார். ...
-
லக்னோ கிரிக்கெட் மைதானத்தின் மேற்பார்வையாளர் நீக்கம்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டியில் நடந்த தவறு காரணமாக லக்னோ மைதானத்தின் மேற்பார்வையாளர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ...
-
பிட்ச் பராமரிப்பாளர்கள் தான் காரணம் - லக்னோ பிட்ச் குறித்து பரஸ் மாம்ப்ரே கருத்து!
குறைந்த ஸ்கொர் அடிக்கும்படியான பிட்ச்சை தயார் செய்யச்சொல்லி இந்திய அணி வற்புறுத்துகிறதா? என்கிற கேள்விக்கு பரஸ் மாம்பரே பதில் கொடுத்திருக்கிறார். ...
-
லக்னோ மைதானத்தை கடுமையாக விமர்சித்த கௌதம் கம்பீர்!
இந்தியா - நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டி20 போட்டிக்கான ஆடுகளத்தை முன்னாள் இந்திய வீரரான கவுதம் கம்பீர் மிக கடுமையான விமர்சித்துள்ளார். ...
-
இந்த ஆடுகளம் நிச்சயம் எனக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியும் தான் தந்தது - ஹர்திக் பாண்டியா!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அமைக்கப்பட்ட ஆடுகளம் குறித்து ஹர்திக் பாண்டியா தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
IND vs SA, 2nd T20I: வெளிச்சமின்மை காரணமாக நிறுத்தப்பட்ட ஆட்டம்!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டி போதிய வெளிச்சமின்மை காரணமாக சிறுது நேரம் நிறுத்தப்பட்டது. ...
-
ஆடுகளங்களை விமர்சிக்கும் வீரர்கள் மீது சயீத் அஜ்மல் கடும் தாக்கு!
ஆடுகளங்களை குறைகூறும் வீரர்கள் கிரிக்கெட்டே ஆடக்கூடாது என்று மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார் பாக்., முன்னாள் வீரர் சயீத் அஜ்மல். ...
-
ராவல்பிண்டி பிட்ச் சராசரிக்கு கீழ் என ரிப்போர்ட் கொடுத்த போட்டி நடுவர்!
பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடந்த ராவல்பிண்டி ஆடுகளம் ”சராசரிக்கு கீழ்” என்று போட்டி நடுவர் அறிவித்துள்ளார். ...
-
தன்மீதான விமர்சனங்களுக்கு இமாம் உல் ஹக் பதிலடி!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்டின் 2 இன்னிங்ஸ்களிலும் சதமடித்தும் சிலர் தன்னை விமர்சித்த நிலையில், அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் இமாம் உல் ஹக். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47