Advertisement
Advertisement

David warner farewell test

டேவிட் வார்னருக்கு ஜெர்சியை பரிசளித்த பாகிஸ்தான் அணி!
Image Source: Google

டேவிட் வார்னருக்கு ஜெர்சியை பரிசளித்த பாகிஸ்தான் அணி!

By Bharathi Kannan January 06, 2024 • 13:00 PM View: 117

பாகிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. இதையடுத்து சிட்னி நகரில் தொடங்கிய கடைசி போட்டியில் ஒய்ட்வாஷ் தோல்வியை தவிர்க்கும் முனைப்படும் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 317 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 88, அமீர் ஜமால் 82 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக பட் கமின்ஸ் 5 விக்கெட்களை சாய்த்தார்.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவை மிகச் சிறப்பாக பந்து வீசிய பாகிஸ்தான் 299 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியது. ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக மார்னஸ் லபுஸ்ஷேன் 60, மிட்சேல் மார்ஷ் 54 ரன்கள் எடுக்க பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக அமீர் ஜமால் 6 விக்கெட்கள் எடுத்தார். பின் 14 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய பாகிஸ்தான் 2வது இன்னிங்ஸில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 115 ரன்கள் மட்டும் எடுத்து வெற்றியை கைவிட்டது. அந்த அணிக்கு அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஜோஸ் ஹேசல்வுட் 4, நேதன் லயன் 3 விக்கெட்களை எடுத்தனர்.

Related Cricket News on David warner farewell test