Advertisement

டேவிட் வார்னருக்கு ஜெர்சியை பரிசளித்த பாகிஸ்தான் அணி!

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை பெற்றுள்ள டேவிட் வார்னருக்கு பாகிஸ்தான் அணி வீரர்கள் கையொப்பமிட்ட ஜெர்சியை அந்த அணியின் கேப்டன் ஷான் மசூத் வழங்கியுள்ளார்.

Advertisement
டேவிட் வார்னருக்கு ஜெர்சியை பரிசளித்த பாகிஸ்தான் அணி!
டேவிட் வார்னருக்கு ஜெர்சியை பரிசளித்த பாகிஸ்தான் அணி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 06, 2024 • 01:00 PM

பாகிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. இதையடுத்து சிட்னி நகரில் தொடங்கிய கடைசி போட்டியில் ஒய்ட்வாஷ் தோல்வியை தவிர்க்கும் முனைப்படும் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 317 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 88, அமீர் ஜமால் 82 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக பட் கமின்ஸ் 5 விக்கெட்களை சாய்த்தார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
January 06, 2024 • 01:00 PM

அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவை மிகச் சிறப்பாக பந்து வீசிய பாகிஸ்தான் 299 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியது. ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக மார்னஸ் லபுஸ்ஷேன் 60, மிட்சேல் மார்ஷ் 54 ரன்கள் எடுக்க பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக அமீர் ஜமால் 6 விக்கெட்கள் எடுத்தார். பின் 14 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய பாகிஸ்தான் 2வது இன்னிங்ஸில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 115 ரன்கள் மட்டும் எடுத்து வெற்றியை கைவிட்டது. அந்த அணிக்கு அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஜோஸ் ஹேசல்வுட் 4, நேதன் லயன் 3 விக்கெட்களை எடுத்தனர்.

Trending

இறுதியில் 130 என்ற சுலபமான இலக்கை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு உஸ்மான் கவாஜா முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த போதிலும் 2வது விக்கெட்டுக்கு 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்த டேவிட் வார்னர் 7 பவுண்டரியுடன் தனது கடைசி இன்னிங்ஸில் 57 ரன்களில் அவுட்டாகி ஆஸ்திரேலியாவின் வெற்றியை உறுதி செய்து ஓய்வு பெற்றார். கடந்த 2011இல் அறிமுகமாகி இதுவரை 112 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள டேவிட் வார்னர் 8,786 ரன்களை 44.6 என்ற நல்ல சராசரியில் எடுத்துள்ளார். அவர் 26 சதங்கள் 37 அரை சதங்கள் 3 இரட்டை சதங்கள் விளாசி ஆஸ்திரேலியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement