Advertisement
Advertisement
Advertisement

Deepti sharma six

பரபரப்பான ஆட்டத்தில் சிக்ஸர் விளாசி வெற்றியை தேடித்தந்த தீப்தி சர்மா - காணொளி!
Image Source: Google
Advertisement

பரபரப்பான ஆட்டத்தில் சிக்ஸர் விளாசி வெற்றியை தேடித்தந்த தீப்தி சர்மா - காணொளி!

By Bharathi Kannan August 19, 2024 • 14:16 PM View: 70

இங்கிலாந்தின் நடைபெற்று வந்த தி ஹண்ட்ரட் மகளிர் கிரிக்கெட் தொடரானது நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் வேல்ஷ் ஃபையர் மற்றும் லண்டன் ஸ்பிரிட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வேல்ஷ் ஃபையர் அணியானது இன்னிங்ஸின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்களை மட்டுமே சேர்த்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக ஜெஸ் ஜோனசன் 54 ரன்களையும், ஹீலி மேத்யூஸ் 22 ரன்களையும், டாமி பியூமண்ட் 21 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்த மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். லண்டன் அணி தரப்பில் எவா கிரே மற்றும் சாரா கிளென் ஆகியோர் அதலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய லண்டன் ஸ்பிரிட் அணியும் ஆரம்பத்தில் தடுமாறியது. 

Advertisement

Related Cricket News on Deepti sharma six