
எமர்ஜிங் பிளேயர்ஸ்க்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் இலங்கை தலைநகர் கொழும்புவில் வரும் 13ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம்,இலங்கை உள்ளிட்ட அணிகள் விளையாடுகின்றனர்.
பிசிசிஐ பொறுத்த வரை சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஏ அணி அணியை அனுப்புகிறது. ஒரு காலத்தில் இந்திய ஏ அணி தொடரை அவ்வப்போது நடத்தும் பிசிசிஐ கரோனாவுக்கு பிறகு அதில் ஆர்வம் காட்டாமல் விட்டது. இது இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை பாதித்தது. இந்திய அணி பல்வேறு தொடர்களில் தோல்வி அடைந்ததற்கு இந்திய ஏ அணி போட்டிகளை நடத்தாமல் விட்டது தான் காரணம் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.
ஏனெனில் ஏசிசி நடத்தும் எமர்ஜிங் வீரர்களுக்கான ஆசியக் கோப்பைத் தொடர் நடக்கிறது. இந்த தொடர் தொடங்க பத்து நாட்களை உள்ள நிலையில் கடைசி கட்டத்தில் இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கும்,உள்ளூர் கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடிய வீரர்களுக்கும் சரிசம அளவில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.