England women tour of ireland 2024: Cricket News & Match Updates
IReW vs ENGW, 1st ODI: ஆல் ரவுண்டராக அசத்திய கேட் கிராஸ்; இங்கிலாந்து அணி அசத்தல் வெற்றி!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் இங்கிலாந்து மகளிர் அணியானது தற்மயம் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியானது இன்று பெல்ஃபெஸ்டில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் வீராங்கனைகள் உனா ரெய்மண்ட் ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் கேபி லூயிஸ் 7 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் இணைந்த ஏமி ஹண்டர் - ஓர்லா பிரெண்டர்காஸ்ட் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஏமி ஹண்டர் 37 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for England women tour of ireland 2024 - Tesst
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47