
கர்நாடகாவில் நடைபெற்றுவரும் மஹாராஜா கோப்பை டி20 லீக் தொடரின் நடபாண்டு சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 17ஆவது லீக் போட்டியில் பெங்களூரு பிளாஸ்டர்ஸ் மற்றும் ஹுப்லி டைகர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஹுப்லி டைகர்ஸ் அணியானது 10 ஓவர்கல் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் மனீஷ் பாண்டே 33 ரன்களையும், முகமது தஹா 31 ரன்களையும், அனீஷ்வர் கௌதம் 30 ரன்களையும் சேர்த்தனர். பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணி தரப்பில் லவிஷ் கௌஷல் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணியில் கேப்டம் மயங்க் அகர்வால் அரைசதம் கடந்து அசத்திய கையோடு 54 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் பெரிதளவில் சோபிக்க தவற பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணியும் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களைச் சேர்த்து போட்டியை சமன்செய்தது. ஹுப்லி டைகர்ஸ் அணி தரப்பில் மன்வந்த் குமார் 4 விக்கெட்டுகளையும், வித்வாத் கவெரெப்பா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து இப்போட்டியானது சூப்பர் ஓவர் முறைக்கு சென்றது.