Hussain talat
ஆசிய கோப்பை 2025: இலங்கையை வீழ்த்தி இறுதிப் போட்டி வாய்ப்பை தக்கவைத்தது பாகிஸ்தான்!
டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேச அணிகள் முன்னேறின. இதில் நேற்று நடைபெற்ற சூப்பர் 4 ஆட்டத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் மெண்டிஸ் முதல் பந்திலேயே விக்கெட்டை இழக்க, பதும் நிஷங்காவும் 8 ரன்களுடன் நடையைக் கட்டினார். அவர்களைத் தொடர்ந்து குசால் பெரேரா 15 ரன்களுக்கும், கேப்டன் சரித் அசலங்க 20 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். மேற்கொண்டு களமிறங்கிய கமிந்து மெண்டிஸ் ஒருபக்கம் அபாரமாக விளையாடி ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுமுனையில் களமிறங்கிய தசுன் ஷன்கா ரன்கள் ஏதுமின்றியும், வநிந்து ஹரங்கா 15 ரன்னிலும் விக்கெட்டுகளை இழந்தனர். அதேசமயம் கமிந்து மெண்டிஸ் தனது அரைசத்தத்தைப் பதிவு செய்து அசத்தினார்.
Related Cricket News on Hussain talat
-
பிஎஸ்எல் 2022: மாலிக், தாலத் அதிரடி; கிளாடியேட்டர்ஸுக்கு 186 ரன்கள் இலக்கு!
பிஎஸ்எல் 2022: குயிட்டா கிளாடியேட்டர்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெஷ்வர் ஸால்மி அணி 186 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47