
PSL 2022: Peshawar Zalmi finishes off 185/7 (Image Source: Google)
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்று வரும் 22ஆவது லீக் ஆட்டத்தில் பெஷ்வர் ஸால்மி - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற பெஷ்வர் ஸால்மி அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் ஸஸாய், லியாம் லிவிங்ஸ்டோன் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து முகமது ஹரிஸ் 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த சோயிப் மாலிக் - ஹுசைன் தாலத் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர்.