Advertisement
Advertisement

Indian cricket pitches

அடுத்த 3 வாரங்களில் இந்திய மைதானங்கள் மீது விமர்சனங்களை குவிப்பார்கள் - சுனில் கவாஸ்கர்!
Image Source: Google

அடுத்த 3 வாரங்களில் இந்திய மைதானங்கள் மீது விமர்சனங்களை குவிப்பார்கள் - சுனில் கவாஸ்கர்!

By Bharathi Kannan January 09, 2024 • 12:39 PM View: 121

தென் ஆப்பிரிக்க அணிக்கெதிராக நடைபெற்று முடிந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 13 வருடங்கள் கழித்து 1 – 1 என்ற கணக்கில் இந்தியா சமன் செய்து அசத்தியது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற்ற இந்த தொடரை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ள இந்தியா அடுத்ததாக தங்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

முன்னதாக தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் போட்டி ஒன்றரை நாளிலேயே முடியும் அளவுக்கு பிட்ச் ஒருதலைபட்சமாக இருந்தது. குறிப்பாக முதல் நாளிலேயே 23 விக்கெட்டுகள் விழும் அளவுக்கு பேட்ஸ்மேன்கள் திண்டாடிய நிலையில் வேகப்பந்து வீச்சாளர்கள் ராஜாங்கம் நடத்தினார்கள். இதனால் இதே மைதானம் இந்தியாவில் இருந்திருந்தால் வேண்டுமென்றே வெல்வதற்காக அமைக்கப்பட்டதாக வெளிநாட்டவர்கள் விமர்சித்திருப்பார்கள் என இந்திய ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

Related Cricket News on Indian cricket pitches