Irani cup 2022
அடுத்தடுத்து சதங்களை விளாசும் சர்ஃப்ராஸுக்கு குவியும் பாராட்டு மழை!
இராணி கோப்பை கிரிக்கெட் தொடரில் சதம் விளாசி சர்ஃப்ராஸ் கான் ஆட்டம் இழக்காமல் இருக்கிறார். நடப்பாண்டில் உள்ளூர் கிரிக்கெட்டில் அவர் தொடர்ந்து ரன்களை குவித்து வருகிறார். குறிப்பாக ரஞ்சிக்கோப்பை இறுதிப்போட்டி, துலீப் கோப்பை இறுதிப்போட்டி ,நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி என அனைத்திலும் சதம் விளாசிய சர்ஃப்ராஸ் கான், தற்போது இராணி கோப்பையிலும் சதம் அடித்திருக்கிறார்.
இந்த நிலையில் சர்ஃப்ராசை பாராட்டியுள்ள சக மும்பை அணி வீரர் சூரியகுமார் யாதவ், “உன்னை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்” என்று புகைப்படத்துடன் ட்விட்டரில் பதிவிட்டு பாராட்டியுள்ளார். சூரியகுமார் யாதவ் 30 வயது தாண்டிய பிறகு தான் இந்திய அணிக்குள் வந்தார். இதனால் சர்ஃப்ராஸ்கானுக்கு ஆதரவளிக்கும் வகையில் அவர் இப்படி பதிவு செய்துள்ளார்.
Related Cricket News on Irani cup 2022
-
இராணி கோப்பை 2022: சர்ஃப்ராஸ், முகேஷ் குமார் அபாரம்; வலிமையான நிலையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா!
இராணி கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி 107 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47