Irew vs engw 1st t20i: Cricket News & Match Updates
IReW vs ENGW, 1st T20I: அயர்லாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அணி அசத்தல் வெற்றி!
இங்கிலாந்து மகளிர் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் இங்கிலாந்து மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது இன்று டப்ளினில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணிக்கு பிரையோனி ஸ்மித் - டாமி பியூமண்ட் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் முதல் விக்கெட்டிற்கு 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இதில் அபராமாக விளையாடி வந்த பிரையோனி ஸ்மித் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 58 ரன்கள் எடுத்த நிலையில் பிரையோனி ஸ்மித் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய சரென் ஸ்மேல் 25 ரன்களுக்கும், பெய்ஜ் ஸ்காச்ஃபீல்ட் 2 ரன்களுக்கும், ஆடம்ஸ் 16 ரன்களுக்கும், அர்மிடேஜ் 4 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, இறுதிவரை அதிரடியாக விளையாடிய மேடி வில்லியர்ஸ் 35 ரன்களில் விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Irew vs engw 1st t20i - Tesst
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47