Advertisement
Advertisement

Jasprit bumrah instagram post

இணையத்தில் வைரலாகும் ஜஸ்ப்ரித் பும்ராவின் இன்ஸ்டாகிராம் பதிவு!
Image Source: Google

இணையத்தில் வைரலாகும் ஜஸ்ப்ரித் பும்ராவின் இன்ஸ்டாகிராம் பதிவு!

By Bharathi Kannan February 08, 2024 • 11:57 AM View: 136

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்துமுடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியளை நேற்று வெளியிட்டது. அதில் இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா, ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். முன்னதாக சக வீரர் அஸ்வின் முதலிடத்தில் இருந்த நிலையில் அவரை பின்னுக்குத்தள்ளி பும்ரா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

Related Cricket News on Jasprit bumrah instagram post