Kane williamson: Cricket News & Match Updates
ஐபிஎல் 2021: பரபராபான ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி!
ஐபிஎல் தொடரின் 20ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.
இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணிக்கு பிரித்வி ஷா அதிரடியான தொடக்கத்தை கொடுத்து அரைசதம் கடந்தார். பின்னர் 53 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிரித்வி ஷா ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து ஷிகர் தவான் 28 ரன்களிலும், ரிஷப் பந்த் 37 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
பின்னர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்டீவ் ஸ்மித் கடைசி ஓவரில் இரண்டு பவுண்டரிகளை பறக்கவிட்டு அணிக்கு சிறப்பாக ஒரு ஸ்கோரை கொண்டு சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை சேர்த்தது.
இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் டேவிட் வார்னர் 6 ரன்களில் ரன் அவுட்டாகி ஆட்டமிழந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஜானி பேர்ஸ்டோவ், கேன் வில்லியம்சன் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. அதன்பின் 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பேர்ஸ்டோவ் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த விராட் சிங், கேதார் ஜாதவ், விஜய் சங்கர், ரஷித் கான் என அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இருப்பினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேன் வில்லியம்சன் அரைசதம் கடந்து அசத்தியதோடு, அணியை வெற்றியை நோக்கியும் அழைத்து சென்றார்.
அதன்பின் கடைசி ஓவரில் ஹைதராபாத் அணி வெற்றி பெற 16 ரன்கள் தேவை என்ற நிலையில் வில்லியம்சன் ஒரு பவுண்டரி, சுஜித் ஒரு சிக்சரை விளாசினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை சேர்த்து போட்டியை டிரா செய்தது.
இதையடுத்து ஆட்டம் சூப்பர் ஓவர் முறைக்கு சென்றது. இதையடுத்து சூப்பர் ஓவரில் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஹைதராபாத் அணிக்கு கேன் வில்லியம்சன், டேவிட் வார்னர் இணை களமிறங்கி 7 ரன்களை எடுத்தது.
இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி டெல்லி அணிக்கு ரிஷப் பந்த், ஷிகர் தவான் களமிறங்கினர்.இதில் ரஷித் கான் வீசிய மூன்றாவது பந்தை ரிஷப் பந்த் பவுண்டரி அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இதன் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சூப்பர் ஓவர் முறையில் வெற்றிபெற்று அசத்தியது.
Related Cricket News for Kane williamson - Tesst
ஐபிஎல் திருவிழா 2021: மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்; போட்டி முன்னோட்டம், ஃபேண்டஸி லெவன்!
விரைவில் களமிறங்குவேன் - வில்லியம்சன் நம்பிக்கை
IPL 2021: जल्द ही सनराइजर्स हैदराबाद की प्लेइंग XI में दिख सकते हैं केन विलियमसन, फिटनेस को लेकर आई बड़ी अपडेट
IPL 2021: Kane Williamson Getting Back To Full Fitness
VIDEO : सनराइजर्स हैदराबाद की टीम में कब होगी केन विलियमसन की वापसी ? स्टार खिलाड़ी ने खुद दिया सबसे बड़ा अपडेट
IPL 2021: Kane Williamson's Level Head Needed By SRH Amid Hard-Hitters
ਵੀਰੇਂਦਰ ਸਹਿਵਾਗ ਨੇ ਹੈਦਰਾਬਾਦ ਨੂੰ ਦਿੱਤਾ ਗੁਰੂ ਮੰਤਰ, ਇਸ ਖਿਡਾਰੀ ਨੂੰ ਸ਼ਾਮਲ ਕੀਤੇ ਬਿਨਾ ਨਹੀਂ ਮਿਲੇਗੀ ਜਿੱਤ
वीरेंद्र सहवाग ने दिया हैदराबाद को गुरू मंत्र, इस खिलाड़ी को शामिल किए बिना नहीं मिलने वाली है जीत
Kane Williamson Wins New Zealand Cricket's Top Award
Kane Williamson Still Needs To Extra Time To Get Match Fit, Says SRH Coach Bayliss
IPL 2021: SRH की प्लेइंग XI में कब दिखेंगे केन विलियमसन, कोच ट्रेवर बेलिस ने खोला राज
அறிமுக வீரர்களுடன் இங்கிலாந்து தொடரை எதிர்கொள்ளும் நியூசிலாந்து!
World Test Championship: भारत के खिलाफ फाइनल से पहले न्यूजीलैंड ने की टीम घोषणा, टी-20 स्पेशलिस्ट को भी मिली जगह
IPL 2021: सनराइजर्स हैदराबाद से जुड़ने के लिए वार्नर और विलियमसन चेन्नई पहुंचे, दोनों खिलाड़ी हुए क्वारंटीन
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47