
Ravindra, Duffy in New Zealand Test squad (Image Source: Google)
வருகிற ஜூன் மாதம் நியூசிலாந்து அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 2ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை லண்டனிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூன் 10 முதல் 14 வரை பர்மிங்ஹாமிலும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான 20 பேர் அடங்கிய நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
கேன் வில்லியம்சன் தலைமையிலான இந்த அணியில் அறிமுக வீரர்களாக ஆல்ரவுண்டர் ராச்சின் ரவீந்திரா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டஃபி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.