
IPL 2021: Kane Williamson Getting Back To Full Fitness (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் சன் ரைசரஸ் அணியின் முக்கிய வீரராகவும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் கேன் வில்லயம்சன். இவர் காயம் காரணமாக முதல் இரண்டு போட்டிகளில் இவர் அணியில் இடம்பெறாத நிலையில், மிடில் ஆர்டரில் தவித்து வந்த சன்ரைசர்ஸ் அணி அடுத்தடுத்து தோல்வியைத் தழுவியது. இதையடுத்து அணியின் பேட்டிங் வரிசையை வலுப்படுத்த வில்லியம்சனின் வருகை மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தனது கம்பேக் குறித்து பேசிய வில்லியம்சன் ”வலி குறைந்து காயம் விரைவில் குணமாக வேண்டும் என்பதில் கவனமாக உள்ளேன். ஒரு வாரத்துக்குள் முற்றிலும் குணமடைந்து அணிக்குத் திரும்புவேன் என நம்புகிறேன்.
பயிற்சியும் புத்துணர்ச்சியும் சமநிலையில் பெற்று வருகிறேன். உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் விரைவில் உடல் தகுதியுடன் களமிறங்குவேன்” எனக் கூறியுள்ளார்.