Knso vs gg: Cricket News & Match Updates
எல்எல்சி 2024: ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய கெவொன் கூப்ப் - வைரல் காணொளி!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களுக்காக நடத்தபட்டு வரும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் கோனார்க் சூர்யாஸ் ஒடிசா மற்றும் குஜராத் கிரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கோனார்க் சூர்யாஸ் ஒடிசா அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய குஜராத் கிரேட்ஸ் அணியானது கிறிஸ் கெயில் மற்றும் பிரசன்னா ஆகியோரது பொறுப்பான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக கிறிஸ் கெயில் 34 ரன்களையும், பிரசன்னா 31 ரன்களையும் சேர்த்தனர். கோனார்க் சூர்யாஸ் ஒடிசா அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய கெவொன் கூப்பர் ஹாட்ரிக் விக்கெட்டுகளுடன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். Read More...
Related Cricket News for Knso vs gg - Tesst
எல்எல்சி 2024: குஜராத் கிரேட்ஸை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது கோனார்க் சூர்யாஸ்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47