
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களுக்காக நடத்தபட்டு வரும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் கோனார்க் சூர்யாஸ் ஒடிசா மற்றும் குஜராத் கிரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கோனார்க் சூர்யாஸ் ஒடிசா அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய குஜராத் கிரேட்ஸ் அணிக்கு வேன் வைக் - ஷிகர் தவான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் வேன் வை 2 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் தவானுடன் இணைந்த கிறிஸ் கெயில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். இருவரும் அதிரடியாக விளையாடியதுடன் 2ஆவது விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் அரைசதம் டிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கிறிச் கெயில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 34 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய முகமது கைஃப் மற்றும் யாஷ்பால் சிங் ஆகியோர் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டை இழந்தனர். இதன்மூலம் கவென் கூப்பர் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவர்களைத் தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவான் 23 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய லெவராக், மனன் சர்மா ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தானர். இறுதியில் தெபா தாஸ் மற்றும் பிரசன்னா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தனர்.