Advertisement
Advertisement
Advertisement

League commissioner

ஜனவரி மாதம் தொடங்கும் எஸ்ஏ 20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் - கிரேம் ஸ்மித் அறிவிப்பு!
Image Source: Google
Advertisement

ஜனவரி மாதம் தொடங்கும் எஸ்ஏ 20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் - கிரேம் ஸ்மித் அறிவிப்பு!

By Bharathi Kannan June 07, 2024 • 20:07 PM View: 179

இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் டி20 தொடர் போன்று தென் ஆப்பிரிக்காவிலும் டி20 தொடர் 'எஸ்ஏ20 லீக்' என்ற பெயரில் நடைபெற்று வருகிறது. அதில் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களே அணிகளை ஒப்பந்தம் செய்துள்ளனர்.  அதன்படி ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், டர்பன்ஸ் சூப்பர் ஜெயண்ட்ஸ், பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ், எம்ஐ கேப்டவுன், பார்ல் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன.

இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்த முதலிரண்டு சீசன்களிலும் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் இத்தொடரின் மூன்றாவது சீசனிற்கான அறிவிப்பை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி தொடங்கும் இத்தொடரின் இறுதிப்போட்டியானது பிப்ரவரி 08ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Related Cricket News on League commissioner