Man of the match
சச்சினின் சாதனையை நெருங்கிய அஸ்வின்; பாராட்டும் கிரிக்கெட் உலகம்!
வங்கதேசத்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதைத்தொடர்ந்து டிசம்பர் 22ஆம் தேதியன்று மிர்பூரில் தொடங்கிய 2ஆவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் 227 ரன்களுக்கு அவுட்டானது. அதிகபட்சமாக மோனிமுல் ஹைக் 84 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக உமேஷ் யாதவ் மற்றும் அஷ்வின் தலா 4 விக்கெட்டுகள் எடுத்தனர்.
அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா ஒரு கட்டத்தில் 94/4 என தடுமாறினாலும் ரிஷப் பந்த் 93 ரன்களும் ஸ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களும் எடுத்து ஓரளவு காப்பாற்றினர். அதனால் 314 ரன்கள் குவித்த இந்தியாவை ஆல் அவுட்டாக்கிய வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக சாகிப் அல் ஹசன் மற்றும் டைஜூல் இஸ்லாம் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதன் பின் 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய வங்கதேசம் மீண்டும் இந்தியாவின் கட்டுக்கோப்பான பந்து வீச்சில் 231 ரன்களுக்கு அவுட்டானது. அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 73 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக அக்சர் பட்டேல் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
Related Cricket News on Man of the match
-
ஐபிஎல் 2022: அதிக ஆட்டநாயகன் விருதை வென்ற இந்திய வீரர்கள்!
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அபாரமாக செயல்பட்டு அதிக ஆட்டநாயகன் விருதை வென்ற 5 இந்திய வீரர்களை பற்றி இப்போட்டியில் பார்ப்போம். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24