Advertisement
Advertisement

Martin crowe

Ian Smith calls for Martin Guptill's reinstatement in New Zealand's set-up ahead of ODI World Cup 20
Image Source: Google

மார்ட்டின் கப்திலை மீண்டும் அணிக்குள் சேர்க்க வேண்டும் - இயன் ஸ்மித்!

By Bharathi Kannan April 18, 2023 • 20:52 PM View: 200

ஐசிசியின் ஒருநாள் உலக கோப்பை தொடர் இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கிறது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. அனைத்து அணிகளும் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை உறுதி செய்துவருகின்றன. கடைசியாக நடந்த கடந்த 2 ஒருநாள் உலக கோப்பைகளிலும் கோப்பையை வெல்ல வாய்ப்பிருந்தும் கோட்டைவிட்ட நியூசிலாந்து அணி இந்த முறையாவது முதல் முறையாக ஒருநாள் உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. 

கடந்த 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பையில் ஃபைனல் வரை சென்ற நியூசிலாந்து கிட்டத்தட்ட கோப்பையை வென்றுவிட்டது என்றே சொல்ல வேண்டும். ஆனால் அதிகாரப்பூர்வமாக கோப்பையை வெல்லவில்லை.  2019 உலக கோப்பையில் இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான ஃபைனல் டிராவில் முடிந்தது. இதையடுத்து வீசப்பட்ட சூப்பர் ஓவரும் டை ஆக, பவுண்டரிகள் எண்ணிக்கை அடிப்படையில் இங்கிலாந்துக்கு கோப்பை வழங்கப்பட்டது. நியூசிலாந்து அணி ஏமாற்றத்துடன் வெளியேறியது.

Related Cricket News on Martin crowe