NZ vs PAK: கடைசி டி20 போட்டியிலிருந்து டெரில் மிட்செலுக்கு ஓய்வு; மற்று வீரராக ரச்சின் ரவீந்திரா சேர்ப்பு!
பாகிஸ்தான் அணிக்கெதிரான 5ஆவது டி20 போட்டியிலிருந்து நியூசிலாந்து வீரர் டெரில் மிட்செல்லுக்கு ஓய்வளிக்கப்பட்டு, இளம் வீரர் ரச்சின் ரவீந்திராவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த 3 டி20 போட்டிகளின் முடிவிலும் நியூசிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் 3-0 என்ற கணக்கி டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி நேற்று கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 159 ரன்களை இலக்காக நிர்ணயிக்க, அதனை நியூசிலாந்து அணி 18.1 ஓவர்களில் எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றும் அசத்தியது.
Trending
இதில் நியூசிலாந்து அணி தரப்பில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நட்சத்திர வீரர்கள் டேரில் மிட்செல் 7 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 72 ரன்களையும், கிளென் பிலீப்ஸ் 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 70 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச்சில் நாளை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் தொடர் பணிச்சுமை காரணமாக கடைசி டி20 போட்டியிலிருந்து நியூசிலாந்து அணி வீரர் டேரில் மிட்செலுக்கு ஓய்வு வழங்கப்பட்டு, இளம் வீரர் ரச்சின் ரவீந்திராவை அணியில் சேர்த்துள்ளனர். இதனை நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கோரி ஸ்டீட் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அதேபோல் கரோனா தொற்று காரணமாக நான்காவது டி20 போட்டியிலிருந்து விலகிய டெவான் கான்வே இப்போட்டியில் விளையாடுவாரா என்ர சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now