Advertisement
Advertisement
Advertisement

Pawan negi

எல்எல்சி 2023: மனிப்பால் டைகர்ஸை வீழ்த்தி சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் வெற்றி!
Image Source: Google
Advertisement

எல்எல்சி 2023: மனிப்பால் டைகர்ஸை வீழ்த்தி சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் வெற்றி!

By Bharathi Kannan November 28, 2023 • 09:53 AM View: 306

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற நட்சத்திர வீரர்களைக் கொண்டு நடத்தப்படும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற 9ஆவது லீக் போட்டியில் மனிப்பால் டைகர்ஸ் - சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மனிப்பால் டைகர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய மனிப்பால் அணியில் பத்ரிநாத் 2 ரன்களுக்கும், ராபின் உத்தப்பா 11 ரன்களுக்கும், முகமது கைஃப் 7 ரன்களுக்கும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் ஜோடி சேர்ந்த மஸகட்ஸா - ஏஞ்சலோ பெரேரா அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் மஸகட்ஸா 26 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபக்கம் ஏஞ்சலோ பெரேரா 47 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

Advertisement

Related Cricket News on Pawan negi