Priya mishra
ஒரே ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய பிரியா மிஸ்ரா - வைரலாகும் காணொளி!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 3வது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வாரியர்ஸ் அணியில் கேப்டன் தீப்தி சர்மா 39 ரன்களையும், உமா சேத்ரி 24 ரன்களையும் சேர்த்தை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்களை மட்டுமே சேர்த்தது.
குஜராத் சார்பில் பிரியா மிஸ்ரா 3 விக்கெட்டுகளையும், டியாண்டிரா டோட்டின், ஆஷ்லே கார்ட்னர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து, 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணியில் பெத் மூனி, ஹேமலதா ஆகியோர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, நட்சத்திர வீராங்கனைகள் லாரா வோல்வார்ட் 22 ரன்களையும், கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் அரைசதம் கடந்ததுடன் 52 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர்.
Related Cricket News on Priya mishra
-
எங்கள் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர் - ஆஷ்லே கார்ட்னர்!
எங்களிடம் ஒரு ஆழமான பேட்டிங் வரிசை உள்ளது, அதனால் இனி வரும் போட்டிகளில் எங்களில் சிறந்ததைக் காண்பீர்கள் என்று நம்புகிறேன் என குஜராத் அணி கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் தெரிவித்துள்ளார். ...
-
WPL 2025: யுபி வாரியர்ஸ் வீழ்த்தி குஜராத் ஜெயண்ட்ஸ் அசத்தல் வெற்றி!
யுபி வாரியர்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
WPL 2025: யுபி வாரியர்ஸை 143 ரன்களில் சுருட்டியது குஜராத் ஜெயண்ட்ஸ்!
குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த யுபி வாரியர்ஸ் அணி 144 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
INDW vs IREW, 1st ODI: சதத்தை தவறவிட்ட கேபி லூயிஸ்; இந்திய அணிக்கு 239 ரன்கள் இலக்கு!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து மகளிர் அணி 239 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24