Sanju samson csk
எதிர்பார்த்த ஸ்கோரை விட 20-25 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம் - சஞ்சு சாம்சன்!
சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக ரியான் பராக் 47 ரன்களையும், துருவ் ஜூரெல் 28 ரன்களையும் சேர்த்தனர். சிஎஸ்கே அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய சிமர்ஜீத் சிங் 3 விக்கெட்டுகளையும், துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இருப்பினும் இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 42 ரன்களையும், அவருக்கு துணையாக சமீர் ரிஸ்வி 15 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் சிஎஸ்கே அணி 18.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இப்போட்டியில் அபாரமாக பந்துவீசிய சிமர்ஜீத் சிங் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
Related Cricket News on Sanju samson csk
-
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் பேட்டர்கள் தடுமாற்றம்; சிஎஸ்கே அணிக்கு 142 ரன்கள் டார்கெட்!
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 142 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குறிப்பட்ட நேரத்தில் பந்து வீசாமல் தாமதம் ஏற்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
தோனி முன் எந்த திட்டமூம் எடுபடாது - சஞ்சு சாம்சன்!
கடைசி இரண்டு ஓவர் உச்சகட்ட டென்ஷனில் இருந்தேன். ஏனெனில் தோனி முன்பு எந்தவித திட்டமும் எடுபடாது என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேசியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47