T20i world cup 2024
முத்தரப்பு டி20 தொடர்: ஸ்காட்லாந்திற்கு 168 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நெதர்லாந்து!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில் இத்தொடருக்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். அந்தவகையில் நெதர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகின்றனர். அதன்படி இந்த முத்தரப்பு தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் போட்டியில் நெதர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு மேக்ஸ் ஓடவுட் - மைக்கேல் லெவிட் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அரைசதத்தை நெருங்கிய மைக்கேல் லெவிட் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 43 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான மேக்ஸ் ஓடவுட்டும் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
Related Cricket News on T20i world cup 2024
-
முகமது ஷமி விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் - பிரதமர் நரேந்திர மோடி!
காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள இந்திய அணி வீரர் முகமது ஷமி விரைவில் குணமடைய வாழ்த்துவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார். ...
-
வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்த முகமது ஷமி; உலகக்கோப்பை தொடரில் விளையாடுவது சந்தேகம்?
காயம் காரணமாக அறுவைச் சிகிச்சை மேற்கொண்டுள்ள இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, நடப்பு உலகக்கோப்பை தொடரில் விளையாடுவதும் சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47