Tamil nadu vs mizoram: Cricket News & Match Updates
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: வருண் சக்ரவர்த்தி சுழலில் மிசோரமை பந்தாடியது தமிழ்நாடு!
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 6ஆவது சுற்று ஆட்டத்தில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள தமிழ்நாடு மற்றும் மிசோரம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விசாகப்பட்டிணத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து மிசோரம் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய மிசோரம் அணிக்கு ஜெஹு ஆண்டர்சன் மற்றும் லால்ஹ்ரியாத்ரெங்கா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் லால்ஹ்ரியாத்ரெங்கா ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்த நிலையில் ஆண்டர்சனும் 12 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய அக்னி சோப்ரா 23 ரன்களை எடுத்த கையோடு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். Read More...
Related Cricket News for Tamil nadu vs mizoram - Tesst
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47