Utkarsh singh
ரஞ்சி கோப்பை 2025: தமிழ்நாட்டை வீழ்த்தி ஜார்கண்ட் அசத்தல் வெற்றி!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் எலைட் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள தமிழ்நாடு மற்றும் ஜார்கண்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜாம்ஷெட்பூரில் உள்ள கீனன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஜார்கண்ட் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் ஷரந்தீப் சிங் அரைசதம் கடந்து அசத்திய நிலையில், 52 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் விராட் சிங் 40 ரன்களையும், அன்குல் ராய் 46 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து, அணியின் கேப்டன் இஷான் கிஷான், குமார் குஷாக்ரா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் உள்பட மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் ஜார்கண்ட் அணி முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தமிழ்நாடு அணி தரப்பில் ஷாய் கிஷோர், அஜித் ராம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Related Cricket News on Utkarsh singh
-
ரஞ்சி கோப்பை 2025: விஜய் சங்கர் நிதானம்; இலக்கை எட்டுமா தமிழ்நாடு?
ஜார்கண்ட் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் தமிழ்நாடு அணி 5 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2025: பந்துவீச்சாளர்கள் அசததல்; அடுத்தடுத்து ஆல் அவுட்டான தமிழ்நாடு - ஜார்கண்ட்!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ஜார்கண்ட் அணி முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், அடுத்து விளையாடிய தமிழ்நாடு அணியும் 106 ரன்களில் சுருண்டது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24