இந்தியா -வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

Advertisement

அதன்படி களமிறங்கிய இந்தியா அணிக்கு சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா 4 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து வந்த இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் சேர்ந்து ரசிகர்களுக்கு வாணவேடிக்கை காட்டினர். இருவரின் அதிரடியால் அணியின் ஸ்கோரும் ராக்கெட் வேகத்தில் எகிறியது.

Advertisement

அதுமட்டுமின்றி தொடந்து அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 22 பந்துகளிலும், சூர்யகுமார் யாதவ் 23 பந்துகளிலும் என தங்களது அரைசதங்களைப் பதிவுசெய்தனர். அத்துடன் நிறுத்தாத சஞ்சு சாம்சன் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 40 பந்துகளில் தனது முதல் சர்வதேச டி20 சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 111 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்க, 75 ரன்களில் சூர்யகுமார் யாதவும் தனது விக்கெட்டை இழந்தார். 

பின்னர் ஜோடி சேர்ந்த ரியான் பராக் - ஹர்திக் பாண்டியா ஆகியோரும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் 250 ரன்களைக் கடந்தது. பின்னர் 34 ரன்களுக்கு ரியான் பராக்கும், 47 ரன்களுக்கு ஹர்திக் பாண்டியாவும் என விக்கெட்டை இழக்க, இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 298 ரன்களைச் சேர்த்தது. இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி வங்கதேச அணியானது விளையாடி வருகிறது.

 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இந்நிலையில் இப்போட்டியில் வானவேடிக்கை காட்டிய சஞ்சு சாம்சன் ஒரே ஓவரில் அடுத்தடுத்து 5 சிக்ஸர்களை விளாசி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். அதன்படி வங்கதேச அணி வீரர் ரிசாத் ஹொசன் வீசிய இன்னிங்ஸின் ஓவரில் முதல் பந்தை தவறவிட்ட சஞ்சு சாம்சன் அடுத்த 5 பந்துகளை சிக்ஸருக்கு அடித்து அமர்களப்படுத்தினார். இந்நிலையில் சஞ்சு சாம்சன் ஒரே ஓவரில் 5 சிக்ஸர்களை விளாசிய காணொளி இணையத்தில் காட்டுத்தீயாய் பரவிவருகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News