இலங்கை- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் உஸ்மான் கவாஜா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இருவரும் முதல் விக்கெட்டிற்கு 92 ரன்கள்பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். 

Advertisement

அதன்பின் 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிராவிஸ் ஹெட் விக்கெட்டை இழந்த நிலையில், அடுத்து களமிறங்கிய மார்னஸ் லபுஷாக்னே 20 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து கவாஜாவுடன் ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித்தும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் தங்கள் சதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். 

Advertisement

இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 330 ரன்களைக் குவித்தது. இதனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை உஸ்மான் கவாஜா 147 ரன்களுடனும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 104 ரன்களுடனும் தொடர்ந்தனர். இன்றைய ஆட்டத்திலும் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. 

இதில் அபாரமாக விளையாடி வந்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 12 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 141 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய அறிமுக வீரர் ஜோஷ் இங்கிலிஸும் அதிரடியாக விளையாட அணியின் ரன் வேகமும் அதிகரித்தது. அதேசமயம் இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 475 ரன்களைக் குவித்து வலிமையான நிலையில் உள்ளது. இதில் உஸ்மான் கவாஜா 16 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 204 ரன்களுடனும், ஜோஷ் இங்கிலிஸ் 5 பவுண்டரிகள் உள்பட 44 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை அணி தரப்பில் ஜெஃப்ரி வண்டர்சே 2 விக்கெட்டுகளையும், பிரபாத் ஜெயசூர்யா ஒரு விக்கெட்டையும் கைப்பறியுள்ளனர். 

ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்: உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட், மார்னஸ் லாபுஷாக்னே, ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), ஜோஷ் இங்கிலிஸ், பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், மேத்யூ குஹ்னேமன், நாதன் லையன், டாட் மர்ஃபி

Advertisement

இலங்கை பிளேயிங் லெவன்: திமுத் கருணாரத்னே, ஓஷதா ஃபெர்னாண்டோ, தினேஷ் சண்டிமால், ஏஞ்சலோ மேத்யூஸ், கமிந்து மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா(கேப்டன்), குசால் மெண்டிஸ், பிரபாத் ஜெயசூர்யா, நிஷான் பீரிஸ், ஜெஃப்ரி வான்டர்சே, அசிதா ஃபெர்னாண்டோ.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News