பாக்ஸிங் டே டெஸ்ட்: அடுத்தடுத்து சதங்களை விளசிய ஜிம்பாப்வே வீரர்கள்; தடுமாறும் ஆஃப்கானிஸ்தான்!

Updated: Fri, Dec 27 2024 21:18 IST
Image Source: Google

ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிற்து.  அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி புலவாயோவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி, களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு பென் கரண் மற்றும் ஜெய்லார்ட் கும்பி இணை தொடக்கம் கொடுத்தனர்.

இதில் கும்பி 9 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் பென் கரணுடன் இணைந்த கைடானோவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அறிமுக வீரர் பென் கரண் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த நிலையில் 68 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய கைடானோ 46 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய டியான் மெயர்ஸும் 27 ரன்களுடன் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் சீன் வில்லியம்ஸுடன் இனைந்த கேப்டன் கிரேய்க் எர்வினும் சிறாப்பாக விளையாட அணியின் ஸ்கோரும் உயர்ந்தது.

இப்போட்டியில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சீன் வில்லியம்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 5ஆவது சதத்தைப் பதிவுசெய்தார். இதன்மூலம் ஜிம்பாப்வே அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்துள்ள நிலையில் 363 ரன்களைக் குவித்தது. இதனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே சீசன் வில்லியம்ஸ் 153 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் எர்வினுடன் இணைந்த பிரையன் பென்னட்டும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்த்தினர். இதில் கிரெய்க் எர்வின் தனது சதத்தைப் பதிவுசெய்தார்.

அதன்பின் 104 ரன்கள் எடுத்த கையோடு எர்வின் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பிரையன் பென்னட் சதமடித்து அசத்தியதுடன் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 110 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 586 ரன்களைக் குவித்தது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் அல்லா கசான்ஃபர் 3 விக்கெட்டுகளையும், நவீத் ஸத்ரான், ஜாகீர் கான் மற்றும் ஸியா உர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஃப்கான் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. 

Also Read: Funding To Save Test Cricket

அந்த அணியின் தொடக்க வீரர்கள் செதிகுல்லா அடல் 3 ரன்னிலும், அப்துல் மாலிக் 23 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ரஹ்மத் ஷா 49 ரன்களுடனும், ஹஸ்மதுல்லா ஷாஹிதி 16 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். ஜிம்பாப்வே அணி தரப்பில் பிளெஸ்ஸிங் முசரபானி, ட்ரேவர் குவாண்டு ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இதனையடுத்து 491 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆஃப்கான் அணி மூன்றாம் நாள் ஆட்டத்தை  தொடரவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை