Zim vs afg 1st test
பாக்ஸிங் டே டெஸ்ட்: டிராவில் முடிவடைந்த ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டி!
ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி புலவாயோவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து முதல் இன்னிங்ஸில் 586 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 153 ரன்களையும், கிரேய்க் எர்வின் 104 ரன்களையும் மற்றும் பிரையன் பென்னட் 110 ரன்களையும் சேர்த்தனர்.
ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் அல்லா கசான்ஃபர் 3 விக்கெட்டுகளையும், நவீத் ஸத்ரான், ஜாகீர் கான் மற்றும் ஸியா உர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஃப்கான் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் தொடக்க வீரர்கள் செதிகுல்லா அடல் 3 ரன்னிலும், அப்துல் மாலிக் 23 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த ரஹ்மத் ஷா மற்றும் ஹஸ்மதுல்லா ஷாஹிதி இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
Related Cricket News on Zim vs afg 1st test
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: ரன் குவிப்பில் ஆஃப்கானிஸ்தான்; மழையால் ஆட்டம் பாதிப்பு!
ஜிம்பாப்வே மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் மழை காரணமாக முன்கூட்டியே முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: இரட்டை சதமடித்த ரஹ்மத் ஷா; முன்னிலை நோக்கி நகரும் ஆஃப்கானிஸ்தான்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 425 ரன்களைக் குவித்தது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: அடுத்தடுத்து சதங்களை விளசிய ஜிம்பாப்வே வீரர்கள்; தடுமாறும் ஆஃப்கானிஸ்தான்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: சீன் வில்லியம்ஸ் அசத்தல் சதம்; வலிமையான நிலையில் ஜிம்பாப்வே!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி 4 விக்கெட் இழப்பிற்கு 363 ரன்களைக் குவித்துள்ளது. ...
-
ஜிம்பாப்வே vs ஆஃப்கானிஸ்தன், முதல் டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நாளை புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24