ENG vs IND, 1st Test: ஹெடிங்லேவில் நடைபெற்று வரும் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 371 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் இங்கிலாந்து அணி சிறப்பான தொடக்கத்தைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது. 

Advertisement

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஹெடிங்லேவில் உள்ள லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அதிகபட்சமாக கேப்டன் ஷுப்மன் கில் 147 ரன்களையும், துணைக்கேப்டன் ரிஷப் பந்த் 134 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 101 ரன்களையும் சேர்த்திருந்தனர். இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 471 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தராப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஷ் டங்க் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Advertisement

இதனையடுத்து  முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியில் ஒல்லி போப் 106 ரன்களுடனும், சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஹாரி புரூக் 99 ரன்களிலும், பென் டக்கெட் 64 ரன்களிலும் என ஆட்டமிழக்க அந்த அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 465 ரன்களில் அல் அவுட்டானது.இந்திய அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளையும், பிரஷித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 6 ரன்கள் முன்னிலை பெற்றது. 

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் கேல் ராகுல் 18 பவுண்டரிகளுடன் 137 ரன்களையும், ரிஷப் பந்த் 15 பவுண்டரி 3 சிக்ஸர்களுடன் 118 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறின்ர். இதனால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 364 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் ஜோஷ் டங் மற்றும் பிரைடன் கார்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன் கரணமாக இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி நான்காம் நாள் ஆட்டம் முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்களை எடுத்திருந்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய ஐந்தாம் நாள் ஆட்டத்டஹி ஸாக் கிரௌலி 12 ரன்களுடனும், பென் டக்கெட் 09 ரன்களுடனும் தொடர்ந்தனர். இன்றைய நாளின் முதல் ஓவரில் இருந்த பொறுமையாக விளையாடிய இருவரும், தவறான பந்துகளில் மட்டுமே பவுண்டரிகளை விளாசியதுடன் ஸ்டிரைக்கையும் மாற்றி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் பென் டக்கெட் தனது அரைசதத்தையும் பூர்த்தி செய்து அசத்தினார். 

Also Read: LIVE Cricket Score

Advertisement

இதன் காரணமாக 5ஆம் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி விக்கெட்டுகள் ஏதும் இழப்பின்றி 117 ரன்களை எடுத்துள்ளது. இதில் பென் டக்கெட் 64 ரன்களுடனும், ஸாக் கிரௌலி 42 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதனையடுத்து கைவசம் 10 விக்கெட்டுகள் இருக்கும் நிலையில் 254 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News