ENG vs IND, 1st Test: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்த இங்கிலாந்து தொடக்க வீரர் பென் டக்கெட் 149 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

Advertisement

ஹெடிங்லே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்போடியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்களையும், இங்கிலாந்து அணி 465 ரன்களையும் சேர்த்து ஆல் அவுட்டானது. அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி 364 ரான்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 371 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையடுத்து இலக்கை நோக்கி விலையாடி வரும் இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் - ஸாக் கிரௌலி இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் பென் டக்கெட் தனது சதத்தையும், ஸாக் கிரௌலி தனது அரைசதத்தையும் பதிவுசெய்ததுடன், முதல் விக்கெட்டிற்கு 188 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர். பின் 7 பவுண்டரிகளுடன் 65 ரன்களைச் சேர்த்திருந்த ஸாக் கிரௌலி விக்கெட்டை இழந்தார். 

அவரைத்தொடர்ந்து கடந்த இன்னிங்ஸில் இங்கிலாந்து அணிக்காக சதமடித்து அசத்திய ஒல்லி போப் 8 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இருப்பினும் மறுமுனையில் பவுண்டரிகளை விளாசி வந்த பென் டக்கெட் இப்போட்டியை முடித்துக்கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 21 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 149 ரன்னிலும், அடுத்து களமிறங்கிய ஹாரி புரூக் முதல் பந்திலேயும் என அடுத்தடுத்து ஷர்தூல் தாக்கூர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர்.

Also Read: LIVE Cricket Score

அதன்பின் இணைந்துள்ள ஜோ ரூட் மற்றும் கேப்டன் ஸ்டோக்ஸ் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக மூன்றாம் நாள் தேநீர் இடை வேளையானது முன்கூட்டியே எடுக்கப்பட்டுள்ளது. இதில் இங்கிலாந்து அணி தற்போது வரையிலும் 4 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து கைவசம் 6 விக்கெட்டுகள் இருக்கும் நிலையில் 102 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News