நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

Advertisement

இப்போட்டியின் முதல்நாள் ஆட்டமானது மழையால் முழுவதுமாக கைவிடப்பட்ட நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. அதன்படி இன்று தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.  அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 ரன்களையும், ரிஷப் பந்த் 20 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.

Advertisement

இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 46 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளையும், வில்லியம் ஓ ரூர்க் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.  இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திரா சதமடித்து அசத்திய நிலையில், டெவான் கான்வே 91 ரன்களையும், டிம் சௌதீ 65 ரன்களையும் சேர்த்து அசத்தினர்.

இதன்மூலம் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 402 ரன்களைச் சேர்த்து ஆட்டழிந்தது. இந்திய அணி தரப்பில் குல்திப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோ 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.  அதன்பின் 366 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸைத் தொட்ங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர்.

இதில் ஜெய்ஸ்வால் 35 ரன்னிலும், ரோஹித் சர்மா அரை சதம் அடித்து 52 ரன்னிலும் என விக்கெட்டி இழந்த்னர். பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் சர்பராஸ் கான் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் அடித்தும் அசத்தினர். பின்னர் 3ஆம் நாள் ஆட்டத்தின் கடைசி பந்தில் விராட் கோலி 70 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

இதனால் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா அணி இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்களை எடுத்தது. இதனையடுத்து இன்று தொடங்கிய் நான்காம் நாள் ஆட்டத்தை சர்ஃபராஸ் கான் 70 ரன்னுடனும், ரிஷப் பந்த் ரன்கள் ஏதுமின்றியும் இன்னிங்ஸைத் தொடர்ந்தனர். இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்ஃப்ராஸ் காஅன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் த்னது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

Advertisement

அவருடன் இணைந்து விளையாடிய ரிஷப் பந்தும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்த, இருவரது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைக் கடந்தது. இப்போட்டியில் இந்திய அணி 344 ரன்களைச் சேர்த்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டுள்ளது. இந்திய அணி தரப்பில் சர்ஃப்ராஸ் கான் 125 ரன்களுடனும், ரிஷப் பந்த் 53 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதனால் நான்காம் நாள் உணவு இடைவேளையும் முன் கூட்டியே எடுக்கப்பட்டுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News