இங்கிலாந்து மகளிர் அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றது. 

Advertisement

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி டர்பனில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் தஸ்பின் பிரிட்ஸ் 5 ரன்னிலும், சுனே லூஸ் 4 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் இணைந்த லாரா வோல்வார்ட் - அன்னேரி டெர்க்சன் ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

Advertisement

இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட லாரா வோல்வார்ட் 35 ரன்னிலும், டெர்க்சன் 29 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிற்ங்கிய வீராங்கனைகளில் சோலே ட்ரையன் 45 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 31.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. 

இங்கிலாந்து அணி தரப்பில் சார்லீ டீன் 4 விக்கெட்டுகளையும், லாரன் ஃபிலர், சோஃபி எக்லெஸ்டோன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு டாமி பியூமண்ட் - மையா பௌச்சர் இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்து கொடுத்தனர். மேலும் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.

அதன்பின் 33 ரன்களில் மையா பௌச்சரும், 34 ரன்கள் எடுத்த நிலையில் டாமி பியூமண்டும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹீதர் நைட்டும் 7 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த நாட் ஸ்கைவர் பிரண்ட் - டேனியல் வையட் இணையும் பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். இதில் நாட் ஸ்கைவர் பிரண்ட் 20 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேனியல் வையட் 25 ரன்களை சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இக்கிலாந்து மகளிர் அணி 24 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியதுடன் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது. இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சார்லேட் டீன் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார் 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News