2nd Test, Day 1: இலங்கை பந்துவீச்சாளர்கள் அசத்தல்; தடுமாறும் வங்கதேசம்!

Updated: Wed, Jun 25 2025 21:19 IST
Image Source: Google

SL vs BAN, 2nd Test: இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி வீரர்கள் பேதிய அளவில் ரன்களைச் சேர்க்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்துள்ளனர். 

இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (ஜூன் 25) கொழும்புவில் உள்ள சிங்கள ஸ்போர்ட் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இலங்கை அணியை பந்துவீச அழைத்தது.  அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு ஷாத்மான் இஸ்லாம் - அனாமுல் ஹக் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் ஒருபக்கம் ஷாத்மான் இஸ்லாம் ரனக்ளைச் சேர்த்த நிலையில், மற்றொரு தொடக்க வீரரான அனாமுல் ஹக் ரன்கள் ஏதுமின்றி விக்கெட் இழந்து ஏமாற்றமளித்தார்.

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மொமினுல் ஹக்கும் தனது பங்கிற்கு 3 பவுண்டரிகளுடன் 21 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்ப, அடுத்து களமிறங்கிய நஜ்முல் ஹொசைன் சாண்டோவும் 8 ரன்களில் விக்கெட்டை இழந்தர். மேற்கொண்டு அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷாத்மான் இஸ்லாமும் 46 ரன்களை மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த முஷ்ஃபிக்கூர் ரஹிம் மற்றும் லிட்டன் தாஸ் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கியதுடன் 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். 

Also Read: LIVE Cricket Score

இதில் லிட்டன் தாஸ் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 34 ரன்னிலும், முஷ்ஃபிக்கூர் ரஹீம் 5 பவுண்டரிகளுடன் 35 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த மெஹிதி ஹசன் மிராஸ் 31 ரன்களிலும், நயீம் ஹசன் 25 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் முதல்நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 220 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் தைஜூல் இஸ்லாம் 9 ரன்களுடனும், எபோதத் ஹொசைன் 5 ரன்னிலும் களத்தில் உள்ளனர். இலங்கை அணி தரப்பில் அசிதா ஃபெர்னாண்டோ, விஷ்வா ஃபெர்னாண்டோ, சோனல் தினுஷா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை